கோரக்கர் சித்தர் லோகோ
கோரக்கர் சித்தர்
ஜீவசமாதி பீடம்
பதினெண் சித்தர்

கோரக்கர்
சித்தர்

அழியாத வஜ்ரகாயம் பெற்றவர். யோகமும் ஞானமும் ஒன்றாய் விளங்கிய மகா சித்தர். கோரக்கர்.

"மனம் ஒன்றினால் — மலையையும் அசைக்கலாம்."
— கோரக்கர்
கோரக்கர் சித்தர்
01
வாழ்க்கை வரலாறு

கோரக்கர் தோற்றம்

பதினெண் சித்தர்களில் ஒருவர் கோரக்கர் சித்தர். சித்தர்கள் பலரும் சிவாலயங்கள் மற்றும் முருகன் ஆலயங்களில் ஜீவ சமாதி பெற்றிருக்க, இவர் மட்டும் சிவாலயத்தின் வெளியே வலதுபுறம் ஞானச்சுடராய் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார். கோரக்கர் சித்தரின் பிறப்பு சித்த புருஷர்களின் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டது. விபூதி எனில் சாம்பல் என்று ஒரு பொருளும் ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியிலிருந்து 9 வயது பாலனாக கார்த்திகை மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாத, பஞ்சபூதங்களாலும் பாதிக்கப்படாத வஜ்ர காயம் பெற்றவர் என்கிறது தல புராணம். இவர் சீனாவில் 500 வருடங்கள் சித்து விளையாடியதாகவும், பொதிகையில் 400 வருடங்கள் தங்கிய பின் பழனி வந்ததாகவும் அவரது நூலில் குறிப்பிடப்படுகிறது.

02
ஞானசிகரங்கள்

கோரக்கரும் போகரும்

நவபாஷண முருகன் சிலையை போகரும், கோரக்கரும் உருவாக்கி அதனை தைப்பூச பௌர்ணமி நாளில் பழனியில் நிறுவினர்.அதன் பிறகு போகர் கோரக்கரை அழைத்து என்னை (போகரை) பழனியில் சமாதி வைத்த பின் நீ வடக்குப் பொய்கை நல்லூர் சென்று அங்கேயே தவம் செய்து கொண்டிரு, நான் என் சமாதியிலிருந்து வெளிப்பட்டு அங்கு வந்து உன்னை சமாதியில் அடக்கம் செய்கிறேன் என்றார். அதன் படி கோரக்கரை போகர் ஐப்பசி திங்கள் பரணி நட்சத்திரத்தில் வடக்குப் பொய்கை நல்லூரில் ஜீவசமாதி அடைய வைத்தார். இச் சிற்றூரில் சமாதி கூடிய காலம் கி.பி. 1283 ஆம் ஆண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது. கோரக்கரும் போகரும் இணைந்து அமைத்ததே 'சிதம்பர ரகசியம்' என்கின்றனர்

03
திருநூல்கள்

கோரக்கர் அருளிய நூல்கள்

ஒளிவு மறைவு இல்லாமல் சித்த வினோதங்களையும், சித்த மருத்துவ குறித்தும், மற்ற சித்தர்கள் போல் மூடு மந்திரம், பரிபாஷைகள், சங்கேதக் குறிகள் என ஏதும் இல்லாமல் எளிய சொற்களால் நூல்களை உலகுக்கு தந்துள்ளார். கோரக்கர் அருளிய நூல்கள் 40 என்பது அவரது நூல்களால் அறிய முடிகிறது. அதில் பிரசித்து பெற்ற நூல்கள்:- சந்திர ரேகை, நமனாச திறவுகோல், ரவிமேகலை, முத்தாரம், மலைவாகடம், கற்பம், முத்திநெறி, அட்டகர்மம், சூத்திரம், வசார சூத்திரம், மூலிகை, தண்டகடா கற்ப சூத்திரம், பிரம்ம ஞானம் ஆகும். சதுரகிரி மஹாத்மியம் என்கிற தனது நூலில் கோரக்கரே “திருப்பழனி மல்லூர் தன்னில் போகரோடு தெண்டபாணி தெய்வ உருவம் செய்தோம்” என்று சொல்லி இருக்கிறார்.

04
ஆன்மீக தத்துவம்

கோரக்கர் பொய்கைநல்லூரில் ஜீவசமாதி அடைதல்

[கோரக்கர் அருளிய சந்திரரேகை பாடல் :22-23]

"புகன்றிடுவேன் போகரவர் பெருமை தன்னைப்
பூவுலகில் யாவர்களும் பொருந்தி மேவ
அகம் மகிழப் போகநாதர் பழனி தன்னில்
அடங்கிடுமுன் பாகத்தான் வரலாறு முற்றும்
இகம் அறியச் செனனசா கரமுஞ் செப்பி
எனையழைத்து உரகை எனும் பதிக்கே கென்றார்
தகைமையுறச் சித்தரையான் அடக்கம் செய்து
தட்டாமல் உரைகையுற்றுப் பார்த்திட் டேனே."


"பார்த்திருந்த சித்தர்களைப் பார்க்க வைத்தே
பக்குவமாய்ப் போகரவர் தயங்கி டாமல்
சீர்நிறையென் போலவரை ஏய்த்துப் போட்டுச்
சிதறாமல் உரகையினில் என்னைக் கண்டார்
போர்விளங்கப் புதுமையுடன் எனைய ழைத்துப்
பொய்கைநல் லூரென்றிடப் பூங்கா சென்றார்
நேர்மையுடன் எனக்கடக்கம் நிலைமை காட்டி
நெடியகடல் தாண்டிமறு தேசம் போனார்."

ஜீவசமாதியின் முக்கியத்துவம்

ஜீவசமாதி என்பது சாதாரண சமாதி அல்ல — உயிரோடு ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்து உடலை இணையச் செய்த நிலை. சித்தரின் ஆற்றல் என்றும் அப்பீடத்தில் தங்கியிருக்கும். அதனால்தான் இது அபூர்வ சக்தி வாய்ந்த தலம்.

ஜீவசமாதி
கோரக்கர் சித்தரின் கொடை

உள் ஒளி உணர்வு மையம் (தியான மண்டபம்)

மக்களின் பக்தி உணர்வை மேன்மைப்படுத்தி ஞான நிலைக்கு எடுத்துச் செல்ல மன பயிற்சிகளை நம் முன்னோர்கள் காட்டியது தான் தியானம். உண் முக அக வழி பாடாகிய தியானம் சிறக்க ஆசிரம அறக்கட்டளை நிர்வாகம் உள் ஒளி உணர்வு மையம் (தியான மண்டபம்) ஒன்றை ஆசிரமவளாகத்தில் உருவாக்கி உள்ளது.